பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவானது (UGC), ஆராய்ச்சி மற்றும் சர்வதேச ஒத்துழைப்பு இரண்டையும் உள்ளடக்கியதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் (UGC), முன்னாள் சர்வதேச ஒத்துழைப்பு பிரிவை (ICD) மறுசீரமைத்து விரிவுபடுத்துவதன் மூலம் ஆராய்ச்சி மற்றும் சர்வதேச ஒத்துழைப்பு பிரிவை (DRIC) நிறுவியுள்ளது. இலங்கையை பிராந்தியத்தில் ஒரு கல்வி மையமாக மாற்றுவதற்காக இலங்கை பல்கலைக்கழகங்களின் தரவரிசை மற்றும் சர்வதேசமயமாக்கலை ஊக்குவிக்கும் தேசிய கொள்கைக்கு ஏற்ப இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் (UGC) உப தலைவர் சிரேஷ்ட பேராசிரியர் கே.எல். வசந்த குமார, இந்தப் பிரிவிற்குத் தலைமை தாங்குகிறார், மேலும் பல்கலைக்கழகங்களின் கல்வி நிலை, ஆராய்ச்சிக் கலாசாரம் மற்றும் அறிவுசார் சூழலை மேம்படுத்தும் நோக்கில் இது பின்வரும் நடவடிக்கைகளை எடுத்துள்ளது.
* வெளிநாட்டு வெளிப்பாட்டிற்கான ஏற்பாடுகளுடன் முதுகலை கல்விக்கான நிதியை அதிகரித்தல்
துடிப்பான ஆராய்ச்சிக் கலாசாரத்தை உருவாக்குவதற்கான மேலதிக முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன.உப தலைவரின் அலுவலகத்துடன் இணைக்கப்பட்டுள்ள சிரேஷ்ட உதவிச் செயலாளர் திருமதி டப்ளியூ ஏ டீ சீ குணவர்தனவிடமிருந்து மேலதிக விவரங்களைப் பெறலாம் (தொலைபேசி:0112 123623 / மின்னஞ்சல்: dric@ugc.ac.lk / chathurika@ugc.ac.lk )
எம்மைப் பற்றி



