ஜனாதிபதி சட்டத்தரணி திரு.பாலித்த குமாரசிங்க |
|
திரு. பீ. குமாரசிங்க அவர்கள் சிவில் மற்றும் வர்த்தக வழக்குகள் தொடர்பில் முன்னணி ஜனாதிபதி சட்டத்தரணி ஆவார். திரு.குமாரசிங்க அவர்கள் 2006 ஆம் ஆண்டு ஜனாதிபதியவர்களால் ஜனாதிபதி சட்டத்தரணியாக நியமிக்கப்பட்டார். ஜனாதிபதி சட்டத்தரணி திரு. ரொமேஷ் டி சில்வா அவர்களின் சட்ட அலுவலகத்திலிருந்து சிறந்த அனுபவத்தைப் பெற்றுக்கொண்டுள்ள அவர், தற்போது வர்த்தக மேல் நீதிமன்றம், மேல் மாகாண சிவில் மேன்முறையீட்டு நீதிமன்றம், உயர் நீதிமன்றம் மற்றும் கொழும்பு மாவட்ட நீதிமன்றம் ஆகியவற்றில் முனைப்புடன் செயலாற்றி வருகிறார். அவர், வணிகச் சட்டங்கள் தொடர்பில் பரந்தளவிலான அனுபவத்தைக் கொண்டுள்ளதுடன், ஏராளமான வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களுக்கு ஆலோசகராகச் செயற்பட்டு வருகின்றார். அவர் சட்டத்தரணிகள் சங்கத்தின் துணைத் தலைவராகவும், செயற்குழு உறுப்பினராகவும் பணியாற்றியுள்ளதுடன், தேசிய சட்ட சம்மேளனம், நெறிமுறைகள் மற்றும் தொழில்முறை நடத்தைகள், மற்றும் தொடர்ச்சியான சட்டக் கல்வி உள்ளிட்ட பல்வேறு குழுக்களின் தலைவர் பதவியை வகித்துள்ளார். அவர் சில காலம் கொழும்பு சட்ட சங்கத்தின் தலைவராகவும் பணியாற்றியுள்ளார். அவர், ஆறு வருட காலம் அரசாங்க சேவை ஆணைக்குழுவில் பணியாற்றியுள்ளதுடன், சட்டக் கல்விக் கவுன்சில் மற்றும் அதன் கல்விக் குழுவின் அங்கத்தவராகவும் (2010-2015), சுற்றாடல் கவுன்சிலின் தலைவர் (2010-2013) மற்றும் புலமைச் சொத்துக்கள் தொடர்பான ஆலோசனைக் குழுவின் அங்கத்தவராகவும் (2001-2004) நடவடிக்கை மேற்கொண்டுள்ளார். அவர், 2012 முதல் 2016 வரை இலங்கை கிரிக்கெட் ஒழுக்காற்றுக் குழுவின் தலைவராகவும், 2012 - 2015 வரை சட்ட ஆலோசனைக் குழுவின் தலைவராகவும், 2012 இல் நிருவாகக் குழுவின் தலைவராகவும் பணியாற்றினார். அவர் 2012 முதல் 2017 ஆம் ஆண்டின் இறுதி வரை லாஃப் எரிவாயு பி.எல்.சியின் சுயாதீன நிறைவேற்று அல்லாத பணிப்பாளராகப் பணியாற்றினார். அவர் தற்போது நவலோக்க ஹொஸ்பிட்டல் பி.எல்.சியின் சுயாதீன நிறைவேற்று அல்லாத பணிப்பாளராகவும், களுத்துறை போதி அறக்கட்டளையின் நம்பிக்கை பொறுப்பாளராகவும், இலங்கை சட்ட ஆணைக்குழுவின் உறுப்பினராகவும், பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் உறுப்பினராகவும் பணியாற்றுகின்றார். |