| பணத்தைத் திரும்பப்பெறுவதற்ற்கான விண்ணப்பங்களில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் முழுமையாக இல்லாததால் பணத்தைத் திரும்பப்பெறும் காசோலைகளைப் பெறாத உறுப்பினர்களின் பெயர்களை வெளியிட பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது. இணைக்கப்பட்ட பட்டியலில் உங்கள் பெயர் இருந்தால், தயவுசெய்து "படிவம் UR" ஐ நிரப்பி, தொடர்புடைய ஆவணங்களின் சான்றளிக்கப்பட்ட பிரதிகளுடன் படிவத்தை செயலாளர்/ பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவிடம் நீங்கள் கடைசியாகப் பணியாற்றிய பல்கலைக்கழகம்/உயர்கல்வி நிறுவனத்தினூடாகச் சமர்ப்பிக்கவும். கணக்கை வைத்திருக்கும் வங்கி "SLIPS" இல் பதிவுசெய்யப்பட்டிருந்தால், பணம் காசோலை மூலமாகவோ அல்லது SLIPS மூலம் உறுப்பினரின் வங்கிக் கணக்கில் நேரடியாகயாகவோ வரவு வைக்கப்படும். |
|
குறிப்பு: "படிவம் UR" ஐ அனுப்பும்போது பட்டியலில் தோன்றும் குறிப்பிலக்கத்தைக் குறிப்பிடுவது கட்டாயமாகும், மேலும் தேசிய அடையாள அட்டை/கடவுச்சீட்டு மற்றும் வங்கி வரவுப் புத்தகத்தின் சான்றளிக்கப்பட்ட பிரதிகளைச் சமர்ப்பிப்பது கட்டாயமானதாகும். தொடர்புடைய ஆவணங்கள் மற்றும் குறிப்பிலக்கம் இல்லாமல் சமர்ப்பிக்கப்படும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும். |








