உயிரியல் இரசாயன விஞ்ஞானத் துறையின் சிரேஷ்ட பேராசிரியர், உயிரியல் இரசாயன விஞ்ஞான கற்கைத்துறை, மருத்துவ பீடம், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம். முன்னாள் துணைவேந்தர்; யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் மார்ச் 2011 முதல் மே 2017 வரை. |
|
இலங்கை மன்றத்தின் பணிப்பாளர் சபையின் முன்னாள் அங்கத்தவர்; தேசிய விஞ்ஞான மன்றத்தின் நிருவாக சபையின் அங்கத்தவர்; பொதுநலவாய அமைப்பு பல்கலைக்கழகங்கள் சங்கத்தின் நிருவாக சபையின் முன்னாள் நிறைவேற்று அங்கத்தவர்; பொதுநலவாய அமைப்பு பல்கலைக்கழகங்கள் சங்கத்தின் நிருவாக சபையின் அங்கத்தவர்; .இந்தியாவின் புதுடில்லி தெற்காசிய பல்கலைக்கழக சபையின் முன்னாள் அங்கத்தவர்; முன்னாள் தலைவர், ஆராய்ச்சிக் குழு, பனை ஆராய்ச்சி நிறுவனம், பனை அபிவிருத்தி சபை; யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீடத்தின் முன்னாள் பீடாதிபதி; உயிரியல் இரசாயனவியல் கற்கைப் பிரிவின் முன்னாள் தலைவர்; யாழ்ப்பாணப் பல்கலைக்கழக பட்டக் கற்கைகள் பீடத்தின் உயிரியல் விஞ்ஞான கற்கைகள் சபையின் தலைவர்; யாழ்ப்பாணப் பல்கலைக்கழக பட்டக் கற்கைகள் பீடத்தின் மருத்துவ விஞ்ஞானம் மற்றும் விவசாய கற்கைகள் சபையின் அங்கத்தவர்; யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் ஆளணி அபிவிருத்தி நிலையத்தின் முன்னாள் பணிப்பாளர்; வருகைதரு விரிவுரையாளர், உணவு இரசாயனவியல் மற்றும் உயிரியல் தொழில்நுட்பப் பாடநெறிகள், உயிரியல் தொழில்நுட்பப் பிரிவு, லுன்ட் பல்கலைக்கழகம், ஸ்வீடன்; வருகைதரு விரிவுரையாளர், மூலக்கூற்று உயிரியல் மற்றும் உயிர் இரசாயனவியல் நிறுவகம், கொழும்புப் பல்கலைக்கழகம். சிறப்புப் பட்டத் தேர்வுநாடிகளின், M.B.B.S., M.Sc., M.Phil. மற்றும் கலாநிதிப் பட்ட மாணவர்களின் ஆராய்ச்சித் திட்டங்களை மேற்பார்வை செய்தல்; சர்வதேச மற்றும் தேசிய அளவில் M.Phil. மற்றும் கலாநிதிப் பட்ட விண்ணப்பதாரிகளின் தேர்வாளராக நடவடிக்கை மேற்கொள்ளல்; தேசிய மற்றும் சர்வதேச சஞ்சிகைகளில் ஆராய்ச்சிக் கட்டுரைகளுக்கு நடுவராக நடவடிக்கை மேற்கொள்ளல், சுமார் 5 Ph.D மாணவர்கள், சுமார் 13 M.Phil மாணவர்கள் மற்றும் M.Sc. சுமார் 12 மாணவர்கள் மேற்பார்வைக்குட்படுத்தப்பட்டனர். மொத்தம் 126 ஆய்வுக் கட்டுரைகள், 310 கருத்தரங்கு அறிக்கைகள் மற்றும் 3 புத்தகங்கள் வெளியிடப்பட்டுள்ளன. IRQUE திட்டத்தில் (உலக வங்கி திட்டம்) அடிப்படை முன்மொழிவுகளை எழுதுதல் சம்பந்தமாக உள்ளூர் பயிற்சியாளர்; முன்மொழிவு மதிப்பாய்வாளர்களுக்கான தேசிய பயிற்சியாளர்; அடிப்படை முன்மொழிவுகள் மற்றும் விரிவான திட்டங்களுக்கான தேசிய மதிப்பீட்டாளராக நடவடிக்கை மேற்கொள்ளல்; HETC திட்டத்திற்கான தேசிய மதிப்பீட்டாளர் (உலக வங்கி திட்டம்); AHED திட்டத்திற்கான தேசிய மதிப்பீட்டாளர் (உலக வங்கி திட்டம்); தர காப்பீட்டுக் கவுன்சின் நிறுவனம்சார் மதிப்பாய்வாளர்; பல்கலைக்கழக மானியக் குழுவின் தரக் காப்பீட்டுக் கவுன்சிலின் நிகழ்ச்சித் திட்டங்கள் மதிப்பாய்வாளராக நடவடிக்கை மேற்கொள்ளல். தேசிய ஆராய்ச்சிக் கவுன்சிலின் ஆராய்ச்சித் திட்டங்களை ஒருங்கிணைத்தல்; இரசாயனவியல் பற்றிய சர்வதேச நிகழ்ச்சித் திட்டம் (IPICS), சுவீடன் (2007- 2010); Sida/SAREC, கருத்திட்டப் பிரதானி, சுவீடன் (2007- 2010);TWAS அளிப்பு; IFS அளிப்பு, சுவீடன்; தேசிய விஞ்ஞான மன்றத்தின் (NSF) சில அளிப்புக்கள்.
|