YOUAREHERE எம்மை பற்றி செயலாளர்

University Grants Commission - Sri Lanka

  • English
  • Sinhala
  • Tamil-Sri Lanka

செயலாளர்

 

dr_premakumara

கலாநிதி பிரியந்த பிரேமகுமார

செயலாளர், பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு

கலாநிதி பிரியந்த பிரேமகுமார விஞ்ஞானமாணி பட்டம், வணிக முகாமைத்துவத்தில் பட்டப்பின் டிப்ளோமா, வணிக நிர்வாகத்தில் முதுமாணிப் பட்டம் மற்றும் முகாமைத்துவத்தில் கலாநிதி பட்டம் பெற்றுள்ளார்.

கலாநிதி பிரேமகுமார 1999 ஏப்ரல் மாதம் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவில் (UGC) உதவிச் செயலாளராக இணைந்துகொண்டதுடன், 2005 ஜனவரி மாதம் சிரேஷ்ட உதவிச் செயலாளராக பதவி உயர்வு பெற்றார். பின்னர் அவர் 2010 ஒக்தோபர் மாதம் கல்வி விவகாரங்கள் மற்றும் பல்கலைக்கழக அனுமதிப் பிரிவின் மேலதிக செயலாளராக பதவி உயர்வு பெற்றார். சுமார் 12 வருடங்கள் பல்கலைக்கழக அனுமதிப் பிரிவுக்குப் பொறுப்பாளராக இருந்த அவர், அந்தப் பிரிவை பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் வினைத்திறன் மற்றும் விளைதிறன்மிக்க பிரிவாக மேம்படுத்துவதற்குப் பெரும் பங்களிப்பை வழங்கினார். கலாநிதி பிரேமகுமார மனிதவளங்கள் பிரிவின் மேலதிக செயலாளராக 2011 செப்டம்பர் மாதம் நியமிக்கப்பட்டார்.

கலாநிதி பிரேமகுமார அவர்கள் 2014 ஆம் ஆண்டு தனது 47ஆவது வயதில் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் செயலாளராக நியமிக்கப்பட்டார். அவர் இந்த மதிப்புக்குரிய பதவியை வகிக்கும் ஆறாவது (6 ஆவது) நபராவார்.

இவருக்கு வூஹான் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் கலாநிதிப் பட்டப் படிப்புக்காக சீன புலமைப்பரிசில் கவுன்சிலால் புலமைப்பரிசிலொன்று வழங்கப்பட்டது. ஆராய்ச்சித் திறன் மற்றும் நிர்வாகம்சார் எண்ணக்கருக்களைப் புரிந்து கொள்ளும் திறன் ஆகியவற்றுடன் விடயம் சார்ந்த அறிவை அடையாளம் கண்டுகொள்வதற்கு இது அவருக்கு உதவியது. இவர், மனித வளங்கள் முகாமைத்துவம், பணியாளர்கள் முகாமைத்துவம், மூலோபாயத் திட்டமிடல், சந்தைப்படுத்தல் மூலோபாயங்கள் (உத்திகள்) மற்றும் நிறுவனம்சார் வினைத்திறன் ஆகிய துறைகளில் நிபுணத்துவம் பெற்றவராக இருப்பதுடன் அது சம்பந்தமான வெளியீடுகளையும் வெளியிட்டுள்ளார். அவர் 2005 ஆம் ஆண்டில் ஐக்கிய இராச்சியத்தின் ''Universities and Colleges of Admissions Service'' (UCAS), அயர்லாந்தின் ''Central Admissions Office'' (CAO), சுவிட்சர்லாந்தின் சூரிச் பல்கலைக்கழகம் மற்றும் இந்தியாவின் டில்லி பல்கலைக்கழகம் ஆகியவற்றிற்குச் சென்று அந்தப் பல்கலைக்கழகங்கள் / நிறுவகங்களின் மாணவர் அனுமதி தொடர்பான கொள்கைகள் மற்றும் நடைமுறைகளை மதிப்பாய்வு செய்தார். மேலும், 2007 இல் தென் கொரியாவின் சியோல் நகரில் நடைபெற்ற உயர்கல்வி பட்டப் பாடநெறிகள் மற்றும் டிப்ளோமாக்களை அங்கீகரித்தல் தொடர்பான யுனெஸ்கோவின் (UNESCO) ஒன்பதாவது பிராந்தியக் குழுக் கூட்டத்தில் அவர் இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்தினார். இது தவிர அவர் ஐக்கிய அமெரிக்கா, அவுஸ்திரேலியா, பிரான்ஸ், பஹ்ரைன், மொரிஷியஸ், நெதர்லாந்து மற்றும் கனடாவில் நடந்த மாநாடுகளில் பல்கலைக்கழக மானியக் குழுவைப் பிரதிநிதித்துவப்படுத்தினார்.

தற்போது, கலாநிதி பிரேமகுமார அவர்கள் தேசிய முகாமைத்துவக் கல்வி நிறுவகத்தின் (NSBM) பணிப்பாளர் சபையின் அங்கத்தவராகவும், மொரட்டுவ பல்கலைக்கழகத்தின் (ITUM) தொழில்நுட்ப நிறுவகத்தின் முகாமைத்துவ சபை அங்கத்தவராகவும் அலுவல்களை மேற்கொள்கின்றார். இது தவிர, அவர் தேசிய கல்வி நிறுவகத்தின் (NIE) கல்வி விவகாரங்கள் சபையின், தேசிய முகாமைத்துவக் கல்வி நிறுவகத்தின் (NSBM) கல்வி நிருவாக சபையின் மற்றும் தேசிய வணிக முகாமைத்துவ நிறுவகத்தின் (NIBM) கல்வி நிருவாக சபையின் அங்கத்தவராகவும் அலுவல்களை மேற்கொள்கின்றார்.

பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் செயலாளர் பதவிக்கு மேலதிகமாக, கலாநிதி பிரேமகுமார அவர்கள் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் பல்கலைக்கழக மாணவர் அனுமதிக் குழுவின் செயலாளராகவும் பணியாற்றுகின்றார். 

 

புதிய தகவல்கள்

செய்திகள் மற்றும் நிகழ்வுகள்

விசேட அறிவித்தல்கள்

அளிப்புக்கள் மற்றும் புலமைப்பரிசில்கள்
நிகழ்வுகள்

1 மானிடயவியல் மற்றும் சமூக விஞ்ஞானத்துறையின் நூற்றாண்டு வைபவம் - இலச்சினை மற்றும் இணையத்தளத்தை வெளியிடல்
1 2020 உயர் தர பெறுபேறுகளின் அடிப்படையில் 2020/21 கல்வியாண்டிற்கான பல்கலைக்கழக அனுமதி தொடர்பான ஊடகக் கலந்துரையாடல்
1 2019 உயர் தர பெறுபேறுகளின் அடிப்படையில் 2019/20 கல்வியாண்டிற்கான பல்கலைக்கழக அனுமதி தொடர்பான காணொளி (வீடியோ)
1 இலங்கை ஔடதக் கன்றுகள் அபிவிருத்தி மற்றும் பாதுகாப்புத் திட்டம்
1 கௌரவ கல்வி அமைச்சரின் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவுக்கான விஜயம்
 2 பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் பணிகளைப் பொறுப்பேற்பு
 2 INQAAHE/APQN மாநாடு 2019, இலங்கை
 2 Presentation made by Chairman, UGC at the General Assembly of the INQAAHE biennial conference in Bahrain
 2 புதிய கட்டிடத் திறப்பு விழா

செய்திகள்

தகைமைகளை அங்கீகரித்தல்


தகைமைகளை
அங்கீகரித்தல்